மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி

Ceylon Petroleum Corporation Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Ceylon Electricity Board Economy of Sri Lanka
By Fathima May 18, 2023 05:44 AM GMT
Fathima

Fathima

மின்சாரம் மற்றும் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (17.05.2023) புதன்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ranil wickremesinghe

வர்த்தமானி அறிவித்தல்

முன்னதாக, 2022, ஆகஸ்ட் 03, செப்டம்பர 03, அக்டோபர் 4, 2023 ஜனவரி 3, 2023 பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானது என்று அறிவித்து ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன.