சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Crime
By Laksi Dec 28, 2024 10:17 PM GMT
Laksi

Laksi

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருள்களை நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  (Anura Kumara Dissanayake) கவனம் செலுத்தியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள்,சட்டவிரோத பொருள்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம்

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம்

சட்ட நடவடிக்கைகள்

அதற்காக, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம்,விமான நிலையம்,விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு,கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது குறித்து விசேட கலந்துரையாடல் | Special Discussion Prevention Illegal Activities

மேலும், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் மத்தியில் சுங்கம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW