வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல்

Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Mubarak Oct 04, 2024 06:21 AM GMT
Mubarak

Mubarak

வடக்கு மாகாண (Northern Province) வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் , வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துறையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று (30.10.2024) நடைபெற்றது.

இதன்போது தனியார் போக்குவரத்து சபையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தனியார் பேருந்து நிலையம், தரிப்பிடங்களில் காணப்படும் வசதி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாற்று தீர்விற்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மாற்று தீர்விற்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நேர கட்டுப்பாடுகள்

மேலும் அரச போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சபை இரண்டுக்கும் இடையிலான நேர கட்டுப்பாடுகள், நேர அட்டவணைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல் | Special Discuss On North Province Transport Issues

தனியார் போக்குவரத்து சங்கங்களுக்கு இடையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை புதிதாக சங்கங்களில் இணைந்து கொண்டவர்கள் மீறுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பயணிகள் பல இடையூறுகளை எதிர் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தனியார் போக்குவரத்து

இதன் போது தனியார் போக்குவரத்து சங்கங்களில் பணி புரிபவர்களின் ஒழுக்கம் மற்றும் அவர்களது ஆடை தொடர்பாக கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல் | Special Discuss On North Province Transport Issues

மேற்படி விடயங்கள் தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை இவை தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபைக்கு இடையிலான தொடர்பையும் சரியாக பேணுமாறும் அவர்களுக்கு உரிய பதிலை விரைவாக வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW