சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
Government Of Sri Lanka
Sugar Price
Sugar
By Rakshana MA
இலங்கையில் தற்போது சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் கவனம்
மேலும், குறித்த தொழிற்சாலைகள் மூலம், உற்பத்தி செய்யப்படும் சீனியை முறையாக விநியோகிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளik குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |