அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் குறித்து வெளியான அறிவிப்பு
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு வியாபாரியும் அரிசியை இறக்குமதி செய்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என வர்த்தக, வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி இறக்குமதி
இந்த நிலையில், சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி, தனியார் துறையினர் இதுவரை 75,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.
மேலும், இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக்தொன் கெகுலு அரிசியும் 43,000 மெற்றிக்தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |