தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு(Election Commission of Srilanka) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று(03) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலோ வாக்குச் சாவடிகள் மட்டத்திலோ திறந்துள்ள அலுவலகங்களிலும் 60 அடி கொண்ட பேனர் தவிர்த்து வேறு எந்த அலங்காரம், போஸ்டர்களும் காட்சிப்படுத்த முடியாது.
தேர்தல் சட்ட மீறல்கள்
அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்களை காட்சிப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு அபேட்சகர் அல்லது ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |