அம்பாந்தோட்டை மக்களுக்கான விசேட அறிவிப்பு

Ampara Sri Lanka
By Fathima Jul 28, 2023 11:04 PM GMT
Fathima

Fathima

இன்றைய தினம் (29) சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும வங்கிக் கணக்கை திறந்து கொள்வதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இதற்காக திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் நாளைய தினம் (30) ஞாயிற்றுக் கிழமையும் வங்கி கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.