பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Ministry of Education Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Education
By Rakshana MA Dec 23, 2024 04:32 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மாத்திரம் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யாத பயனாளிகள் மற்றும் காப்பீடு செய்யாத குழந்தைகளுக்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

உதவித்தொகை

அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் கடந்த 3ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Special Allowance For School Students

இதன்படி எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த 02ஆம் திகதி அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணித்தியாலயத்தில் பதிவான விபத்துக்கள் : பொலிஸ் ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு

கடந்த 24 மணித்தியாலயத்தில் பதிவான விபத்துக்கள் : பொலிஸ் ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW