விண்வெளியில் திருமண சேவை: வெளியான கட்டண அறிவிப்பு
பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திருமண சேவைக்கு சுமார் நான்கு கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆர்வத்துடன் பதிவுசெய்யும் மக்கள்
கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இந்ததிட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே ஆர்வத்துடன் தங்கள் பதிவுகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.