போராட்டத்தில் குதித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

South Eastern University of Sri Lanka SL Protest Law and Order
By Laksi Mar 29, 2025 08:16 AM GMT
Laksi

Laksi

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது நேற்றையதினம் (28) பல்கலைக் கழகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

போராட்டம்

இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டிருந்தது.

போராட்டத்தில் குதித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் | Southeastern University Students Strike

கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery