தென்கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன மயமாக்க வேண்டும்: இம்ரான் எம்.பி

South Eastern University of Sri Lanka Imran Maharoof Education
By Laksi Dec 27, 2024 03:20 AM GMT
Laksi

Laksi

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது கல்விச் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof ) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காக தமது தொழில் நுட்ப ஆற்றலை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு

வெளிவாரிப்பட்டப் படிப்பு

அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் நாலா புறங்களையும் சேர்ந்த மாணவர்கள் வெளிவாரிப்பட்டப் படிப்புக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தம்மை பதிவு செய்துள்ளனர். இவர்களில் தொழில் புரிவோரும் உள்ளனர். தொழில் இல்லாதோரும் உள்ளனர்.

தொழில் இல்லாதோர் பெரும் பணச்செலவு செய்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.ஒரு நாள் பல்கலைக்கழக சூழலில் தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன மயமாக்க வேண்டும்: இம்ரான் எம்.பி | South Eastern University Needs Modern Technology

இதனால் பல சிரமங்களை இந்த மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்தச் சிரமங்களால் சிலர் தமது வெளிவாரிப் பட்டப்படிப்பை கைவிட்டும் உள்ளனர்.

இந்த விடயத்தை பல மாணவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பினேன்.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

இணையவழி வகுப்பு

ஒன்று பிராந்தியக் கற்கை நிலையங்களை ஏற்பாடு செய்வது.இணையவழி வகுப்புகளை நடத்துவது மற்றொன்று. எனினும், இந்த விடயங்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

பல பல்கலைக்கழகங்கள் தமது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணையவழி வகுப்புகளை நடத்தும் போது தென்கிழக்குப் பலக்லைக்கழகம் மட்டும் மாணவர்களை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு அழைப்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன மயமாக்க வேண்டும்: இம்ரான் எம்.பி | South Eastern University Needs Modern Technology

சிலவேளை நவீன தொழில்நுட்ப விடயங்களில் இப்பல்கலைக்கழக ஆற்றல் குறைவு காரணமாக இருக்குமோ என எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. அப்படி இருந்தால் அதனை வளர்த்து ஒன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து இப்பலைக்கழகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு இந்த பல்கலைக்கழகம் தன்னை மாற்றிக் கொள்ளாதவிடத்து எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கை நெறிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் ஆபத்து உள்ளதை சம்பந்தப்பட்டோர் விளங்கிக் கொள்வது நல்லது என்றார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அனுமதி: வெளியாகிய அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அனுமதி: வெளியாகிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW