இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Fisherman Somalia
By Kamal Mar 19, 2024 01:14 AM GMT

மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரேபிய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை 

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Somali Pirate Threat Sri Lankas Fishermen

அண்மையில் அரேபிய கடற்பரப்பில் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருந்தனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் குறித்த கடற் பரப்பில் தொடர்ந்தும் சஞ்சரித்து வருவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது ஆபத்தானது என மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹாவத்த தெரிவித்துள்ளார்.