சம்பூரில் நிறுவப்படவுள்ள சூரிய மின் வலு உற்பத்தி நிலையம்!
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான மின்வலு நிலையமொன்று, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் சம்பூரில் நிறுவப்படவுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மின் உற்பத்தி நிலையம்
இந்த நிலையில் கடந்த ரணில் ஆட்சியில் 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதம், சம்பூரில் சூரிய வலு மின்னுற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்கும் செயற்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதன்படி, முன்னாள் எரிசக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சம்பூர் சூரிய வலு மின்னுற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |