சமூக ஊடகவியலாளர் புரூனோ திவாகரா கைது
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Fathima
பௌத்த மதத்துக்கு நிபந்தனை செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடாஷாஎதிரிசூரியவுக்கு உதவிய குற்றத்திற்காக சமூக ஊடகவியலாளரான புரூனோ திவாகரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் நேற்று அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், இவரே நடாஷாவின் கருத்துக்களை சமூகத்தில் தரவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடாஷா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.