சம்மாந்துறையில் இளைஞர்களுக்கான சமூக நல்லிணக்கம்: கப்சோவின் நிகழ்வு!
சம்மாந்துறையில் வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை எற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்சோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது இன்று (23) அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒரு வருட நிகழ்ச்சித்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வன்முறைகளற்ற இளைஞர் சமூகம்
'வன்முறைகளை தவிர்க்கும் இளைஞர்கள்' எனும் தொனிப்பொருளிலான வீதி நாடகம் ஒரு வருட காலமாக செயற்பட்டு வந்த நிலையில், 300க்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்து கௌரவிக்கப்பட்டனர்.
மேலம் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன், சிறப்பு அதிதியாக சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, அம்பாறை, தமண மற்றும் அக்கரைபற்று பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக இளைஞர் மன்ற செயற்பாட்டாளர்கள் உட்பட ஹெல்விடாஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |