சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
Ranil Wickremesinghe
SL Protest
President of Sri lanka
By Fathima
சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (26.06.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
இந்த சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குறித்த செயற்பாட்டாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.