சவுதி அரேபிய பாலைவனத்தில் பனியால் ஏற்பட்ட மாற்றம்
சவுதி அரேபிய (saudi arabia) பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த காரணத்தினால் இப்பனிப்பொழிவு உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அதிசய பனிப்பொழிவு
சவுதி அரேபியாவின் வறண்ட பாலைவன நிலப்பரப்பை கொண்ட அல்-ஜாவ்ப் பகுதியில் முதல் முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை தொடர்ந்து இந்த பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு வெண் பட்டுப்போல் போர்த்தியிருப்பதை மக்கள் தங்களின் சமூக வலைதளத்தில் புகைப்படங்களாகவும் கானொளிகளாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணமாக இருக்கலாம் என ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |