யாழ்.போதனா வைத்தியசாலையில் விதிக்கப்பட்டுள்ள தடை : த.சத்தியமூர்த்தி

Jaffna Government Employee Ministry of Health Sri Lanka Jaffna Teaching Hospital National Health Service
By Fathima Sep 13, 2023 03:25 PM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.

கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோரின் கையடக்க தொலைபேசி பாவனைக்கு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடை விதித்துள்ளார்.

பணிப்பாளர் தடை

யாழ்.போதனா வைத்தியசாலையில் விதிக்கப்பட்டுள்ள தடை : த.சத்தியமூர்த்தி | Smartphone Ban For Jaffna Hospital Staffs

யாழ். போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 8 வயதுசிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்களின் கவனக் குறைவினாலேயே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.