வீதியில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து
வீதியில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் கார் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் காயமடைந்துள்ளத்துடன் விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் மீது மோதி விபத்து
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதன்போது விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் , காயமடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.