முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 24 நீர்த்தேக்கங்களில் நீர் வான் பாய்வதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் உள்ளிட்ட 6 நீர்த்தேக்கங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களிலும் கொள்ளளவை விட நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
வான்கதவுகள் திறப்பு
பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களில், நீர் வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |