மக்களின் குறை கேட்கும் தலைவர் நாமல்! மொட்டுக் கட்சி பெருமிதம்
மக்களின் குறை கேட்கும் தலைவராக நாமல் ராஜபக்சவே தற்போது விளங்குகின்றார் என்று அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், "அச்சுறுத்தல்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது.
அந்தவகையில் எமது நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்தது.மக்களுக்காக எமது அரசியல் நடவடிக்கை தொடரும். அச்சுறுத்தல் மூலம் எவரும் எமது பயணத்தைத் தடுக்க முடியாது.
மக்களின் குறை கேட்கும் தலைவராக நாமல் ராஜபக்சவே தற்போது விளங்குகின்றார். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசிடம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.