ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க மொட்டுக்கட்சி இணக்கம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று(14.06.2023) இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அறிவுறுத்தலுக்கு அமைய, பிரதமரால் அழைக்கப்பட்ட குறித்த கூட்டம், இன்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளுந்தரப்பு அரசியல்
இதன்போது, சமகால அரசியல் நிலவரம், உட்பட, ஆளுந்தரப்பு அரசியலில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது.