ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மூன்று ஐரோப்பிய நாடுகளில் ‘சோம்பல் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் கொடிய வைரஸ் தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசிலில் இனங்காணப்பட்ட இந்த வைரஸ் இறப்புகளைத் ‘தடுக்க முடியாததாக’ மாறக்கூடும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சோம்பல் காய்ச்சல்
இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த வைரஸால் 21 வயது மற்றும் 24 வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நோயால் கடுமையான வயிற்று வலி, இரத்தப்போக்கு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |