சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி

SLPP Maithripala Sirisena
By Madheeha_Naz Mar 02, 2024 01:44 PM GMT

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணி அரசியலமைப்பில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.