எதிர்க்கட்சியில் இணைந்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்டார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (01.01.2024) சந்தித்து கட்சியில் அங்கத்துவம் ஏற்றுக்கொண்டதாக ஷான் விஜயலால் டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் நலன்
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் நலனுக்காக தாம், ஐக்கிய மக்கள் சக்தியில்; இணைந்ததாக அவர் கூறியுள்ளார்.
விஜயலால் தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |