போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

Sri Lanka Police Economy of Sri Lanka South Korea Foreign Employment Bureau
By Fathima Aug 10, 2023 12:40 PM GMT
Fathima

Fathima

கொலன்னாவ பிரதேசத்தில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் அதில் கடமையாற்றிய இரண்டு பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவில் வெல்டிங் தொழில்நுட்பவியலாளர்களை பணிக்கு அமர்த்துவதாகக் கூறி நேர்முகத்தேர்வுகளை இந்த போலி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளது.

நேர்முகதேர்வுகள்

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு | Slbf Foreign Employment

இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்றையதினம் (10.08.2023) அதிகாரிகள் சென்று சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் பதிவு செய்யப்படாதது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வருகை தருவோரிடம் இரண்டு முதல் மூன்று இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW