ஒன்றரை மாதத்தில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெறும்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஒன்றரை மாதங்கள் சிறப்பாக செயல்பட்டால் ஊழல், மோசடி, இலஞ்சம், நிதி மோசடி தொடர்பான விசாரணைகளில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெற முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி மோசடி தொடர்பான எந்தவொரு விசாரணைகளையும் அரசாங்கம் நிறுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் உடன்பாடு
அத்தோடு, அந்த விசாரணைகள் எதுவும் அரசியலாக்கப்படவில்லை என தெரிவித்த அவர், தமது அரசாங்கம் பொலிஸாரை சிபாரிசு செய்ய வைத்துள்ளதாகவும் இரகசிய பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விடயங்கள் அனைத்தையும் சுயாதீனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஊழல், மோசடி, இலஞ்சத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பது நாட்டு மக்களுடன் அரசாங்கத்தின் உடன்பாடு எனவும் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |