ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
கடந்தாண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாயின் மதிப்பு 12.1 சதவீதமும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக 10.7 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வீழ்ச்சி
கடந்த ஆண்டு பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஆண்டு யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 16.3 சதவீதம்,
பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 12 சதவீதம்,
சீன யுவானுக்கு எதிராக 9.6 சதவீதம்,
ஜப்பானிய யென்னுக்கு எதிராக 5.6 சதவீதம்,
அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 12.2 சதவீதம் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக 1 சதவீதம் என இலங்கை ரூபாயின் மதிப்பு சரிந்தது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.