ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Srilanka Muslim Congress Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 03, 2024 07:34 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யாரை ஆதரிப்பது என நாளை (4) தீர்மானிக்கவுள்ளது.

இதனையடுத்து, நாளை (04) கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவுஃப் ஹக்கீம் (Rauff Hakeem) தலைமையில் இடம்பெறவுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு

இதன்போது, யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு | Sl Presidential Election Support For Slmc

தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நூறுக்கு மேற்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW