நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுமாறு ரணில் உத்தரவு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 03:44 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபையினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

ஜனாதிபதி பணிப்புரை

அத்துடன் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுமாறு ரணில் உத்தரவு | Sl President Election Ranil

மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW