ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது : மக்களுடன் கலந்துரையாடவுள்ள ரிஷாட் பதியுதீன்

Batticaloa Risad Badhiutheen Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 12, 2024 02:01 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று மாலை 4.00 மணிக்கு ஓட்டமாவடி அமிர்அலி கேட்போர் கூடத்திலும், மாலை 7.00 மணிக்கு அட்டாஞ்சேனையில் உள்ள லக்கி மண்டபத்திலும்  மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..!

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..!

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் எடுக்கின்ற முடிவிற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக புத்தளம் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது : மக்களுடன் கலந்துரையாடவுள்ள ரிஷாட் பதியுதீன் | Sl President Election People Support Acmc Dicision

மேலும், சஜித்தின் வெற்றிக்காக இந்தமுறை பாடுபடப்போவதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மஹியங்கனையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW