இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 24, 2024 06:21 AM GMT
Laksi

Laksi

இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் நேற்று காலை (24.09.2024) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

அரசியல் உறுதிப்பாடு

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இந்த நாட்டு மக்கள் காண மாட்டார்கள்.

இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி | Sl New President Anura Kumara Dissanayaka

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW