அரிசி இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை: புதிய கோரிக்கை!
Lankasri
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Rice
By Rakshana MA
அரிசி பிரச்சினையை தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பாரியளவான வர்த்தகர்களைப் பாதுகாக்காமல் மக்களைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் அரிசிக்கான தட்டுப்பாடு
இதற்கிடையில் தற்போது சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் சில பல்பொருள் அங்காடிகள் நாட்டு அரிசி விற்பனையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
அதனடிப்படையில், குறித்த அங்காடிகளில், நாளொன்றுக்கு ஒருவர் 3 கிலோ கிராமிற்கு அதிகமாக அரிசியைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |