சர்வதேச நாணய நிதியத்தின் மேலுமொரு நிபந்தனையை செயல்படுத்தும் அரசாங்கம்!

Government Of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Ajith Mar 09, 2025 01:03 AM GMT
Ajith

Ajith

தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கான உரிமைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சட்டங்கள் என்பன, புதிய அரசாங்க செயல் திட்டத்தின் கீழ் விரிவான மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

விதிமுறை

இந்த சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்றும், அவற்றை வழக்கமான நாடாளுமன்ற மேற்பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரும் விதிமுறைகளையும் அரசாங்கம் செயற்படுத்த உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மேலுமொரு நிபந்தனையை செயல்படுத்தும் அரசாங்கம்! | Sl Government The International Monetary Fund

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நிர்வாக நோயறிதல் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் மதிப்பீட்டை முடிக்க ஜனாதிபதி செயலகம் பணிக்கப்பட்டுள்ளது.