டீசல் இறக்குமதியில் மோசடி: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் டீசல் இறக்குமதியில் பெரும் மோசடியொன்றை மேற்கொண்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாடு எழுத்து வடிவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட டீசல் இறக்குமதியில் பெரும் மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் அரசாங்கத்துக்குப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
உரிய விசாரணை
எனவே, அது தொடர்பான கோப்புகளை ஆராய்ந்து பார்த்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கூட்டு எதிர்க்கட்சி தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், சம்பிக ரணவக, மஹிந்த அமரவீர மற்றும் தலதா அதுகோரள உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

