சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Jul 03, 2024 02:15 PM GMT

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கிரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்துள்ளார். 

வெண்மையாக்கும் கிரீமினால் ஏற்படும் பிரச்சினை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 24 மணிநேரத்தில் நான் கிட்டத்தட்ட 60 நோயாளிகளை பரிசோதித்தேன். அதில் 10%, வெண்மையாக்கும் கிரீமினால் ஏற்படும் பிரச்சினைகளுடன் வந்தனர்.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை | Skin Whitening Cream Warning

இவை நீண்ட காலமல்ல, குறுகிய கால பிரச்சினை. நகங்கள் பழுப்பு நிறமாக... ஆரஞ்சு நிறமாக மாறும். இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன. குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW