திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை பெறும்: எம்.எஸ்.தௌபீக் ஆருடம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை திருகோணமலை மாவட்டத்தில் பெறும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த முறை போன்று இந்த முறையும் இரு ஆசனங்களை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பைசல் நகர் பகுதியில் நேற்றையதினம் (30) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆசனங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 43 வீதமான முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளார்கள். பொய்யான வதந்திகளை நம்பி மக்கள் ஏமாறாமல் இம் முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
கிண்ணியாவில் பல கட்சி பல சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்க செயற்படும் விதமாக செயற்படுகிறார்கள்.
எனவே, கடந்த முறை எவ்வாறு வாக்களித்து இரு பிரதிநிதிகளை பெற்றோமோ அதே போன்று இந்த முறையும் அந்த ஆசனங்களை நாம் தக்க வைத்து கொள்ள மக்கள் சிந்தித்து டெலிபோன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |