ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி உத்தரவு! ராஜித வெளிப்படுத்திய தகவல்
தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாக ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளையும் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என அண்மையில் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாகக் கூறப்படும் அறிக்கை தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்னவை சந்தித்தது.
தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ ஆதரிப்பதாக எந்தக் கருத்தையும் தான் வெளியிடவில்லை எனவும், ஊடகங்களால் தனது அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதாகவும் சேனாரத்ன தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.