ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படுவது குறித்து சஜித் தரப்பு எடுத்த முடிவு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐக்கிய மக்கள் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு இந்த பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
இதன்படி குறித்த பேச்சுவார்த்தைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.