இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக 17,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 46 சதவீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
இந்த ஆண்டு 17,459 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 5,018 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 985 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அத்தோடு, டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் மருத்துவ உதவியை நாட முடியும்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் 24 மணி நேரத்திற்குள் வைத்தியரை நாட வேண்டும்.
டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |