வடக்கில் இன்று 6 மணிநேரம் மின்வெட்டு - நாளையும் தொடரும்..

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Oct 02, 2026 12:40 PM GMT

 வவுனியா - மன்னார் உயர் அழுத்த மின்வடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் காரணமாக, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.10.2026) வெளியாகியுள்ள நிலையில், மின்வெட்டு மாலை 6 மணி வரை இருக்கும் என்றும் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

6.30 மணிநேர மின்வெட்டு

இதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மின்தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை சனிக்கிழமையும் 6.30 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இன்று 6 மணிநேரம் மின்வெட்டு - நாளையும் தொடரும்.. | Six Hour Power Cut In The North Today

இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின்வெட்டு செய்யப்படவுள்ளது.

இந்த நீண்ட நேர மின்தடையால் வடக்கு மாகாண மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.