முன்னாள் நாடாளுமன்ற சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

Jaffna M. K. Shivajilingam Hospitals in Sri Lanka
By Fathima Dec 13, 2025 09:27 AM GMT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்றையதினம்(13) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளர் பதவி

தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் உடல் ரீதியாக மிக இயலாத நிலையிலேயே வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி! | Sivajilingam Admitted In The Hospital

சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் இந்த தவிசாளர் பதவியை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நல நிலை குறித்து மேலதிக தகவல்கள் பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.