16 வகை பூச்சிகளை உண்ண சிங்கப்பூர் அரசு அனுமதி

Singapore World
By Shalini Balachandran Jul 10, 2024 10:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பூச்சி

அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்குவதுடன் இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு ககலந்த முட்டை மற்றும் நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வகை பூச்சிகளை உண்ண சிங்கப்பூர் அரசு அனுமதி | Singapore Has Approved 16 Insects To Eat As Food

மேலும், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும் மற்றும் ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW