பூகோள அரசியல் மேம்பாடுகள் குறித்து சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி பேச்சு
சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ(Ng Eng Hen) சந்தித்துள்ளார்.
இதன்போது பூகோள அரசியல் மேம்பாடுகள் மற்றும் கடல்சார் நாடுகளின் பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திக்க உள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது பெரிஸ் உடன்படிக்கையின் கீழ் கார்பன் சீராக்கல் தொடர்பான ஒப்பந்தமும் கைசாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.