ட்ரம்ப் உயிருக்கு ஆபத்து : வைரலாகும் சிம்ப்சன் காணொளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உயிருக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்து என்ற கணிப்புடன் சிம்ப்சன் கார்ட்டூன் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 1989 ஆம் ஆண்டு தி சிம்ப்சன்ஸ் என்ற கார்டூன் தொடர் வெளியாகி வருகிறது.
அதேவேளை, இந்த கார்டூன் தொடர் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் எனவும், இந்த தொடரில் வந்துள்ள சில காட்சிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற தோற்றமுள்ள நபர் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழப்பது போன்ற சிம்ப்சன் கார்டூன் காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி இந்த காணொளியானது, "கடுமையான மார்பு நோயால் பாதிக்கப்பட்டு ஜனாதிபதி ஆகஸ்ட் 2025 இல் இறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என ஒலிக்கும் பின்னணி குரலுடன் தொடங்குகிறது.
மேலும் இந்த காணொளியில், பிரகாசமான ஆரஞ்சு நிற தோல், தங்க நிற முடி மற்றும் நிலையற்ற தன்மை கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் தனியாக நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது.
இதில், ட்ரம்ப் போன்ற தோற்றமுள்ள கார்ட்டூன் உருவம், திடீரென்று வலியால் மார்பைப் பிடித்துக் கொண்டு, தேசிய நேரடி ஒளிபரப்பின் போது சரிந்து விழுவது போல் காணப்படுகின்றது.
வைரலாகும் காணொளி
அத்தோடு, உடனடியாக மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர், "இது வெறும் மன அழுத்தம் அல்ல, இது ஒரு அறிகுறி" என்று கத்துகிறார். இந்த காணொளி, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 17 ஆம் திகதி, ட்ரம்ப்பிற்கு க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி (CVF - Chronic Venous Insufficiency) என்ற நரம்பியல் நோய் இருப்பதை வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியது.
இதில், நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் நிரந்தரமானது என்றாலும், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது இல்லை. உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சரியான சிகிச்சை மூலம், அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது பொதுவானது என்றும், இரத்த பரிசோதனைகள், இதய ஸ்கேன்கள் உட்பட முழு உடல் சுகாதார பரிசோதனை செய்யப்பட்டதில் ட்ரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |