முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ள இரண்டு மில்லியன் சிம் கார்டுகள்

Kanaka Herath Sri Lanka
By Mayuri Jul 09, 2024 03:12 PM GMT
Mayuri

Mayuri

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும், முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

முறையான அடையாளங்கள்

2018ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ள இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் | Sim Usage In Sri Lanka

இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில், சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளும் போது தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW