சீக்கிய தொழிலதிபர் சுட்டுக்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

Pakistan
By Fathima Apr 01, 2023 08:57 PM GMT

பாகிஸ்தானில் மர்மநபர் ஒருவரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி சீக்கிய தொழிலதிபர் பலியான சம்பவம் அங்குள்ள சிறுபான்மையின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவரில் வசித்த தயாள் சிங் என்ற தொழிலதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி

தனது கடையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சீக்கிய தொழிலதிபர் சுட்டுக்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை | Sikh Businessman Shot Dead

தகவலறிந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார்,சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.