சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையைக் குறைப்பதாக அறிவித்த போதிலும், சந்தையில் தற்போது ஒரு கிலோ நாட்டரிசி 225 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |