நாடு முழுவதும் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை! சமல் சஞ்சீவ தெரிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Nov 20, 2025 02:00 PM GMT
Fathima

Fathima

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு

தற்போது நிலவும் இந்த தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா குறிப்பிட்ட சில பிரிவினருக்கே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை! சமல் சஞ்சீவ தெரிவிப்பு | Shortage For Threeposa

இதன்படி, மூன்று வயதுக்கு மேற்பட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், இரத்த சோகை (இரும்புச்சத்து குறைபாடு) உள்ள தாய்மார்களுக்கு திரிபோசா வழங்கப்படுகிறது.

கடந்த பல வருடங்களாக மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு திரிபோசா வழங்கப்படவில்லை.

இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்த போதிலும், இதுவரை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாகவும் மருத்துவர் சஞ்சீவ வருத்தம் தெரிவித்துள்ளார்.