வவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் பலி - இளைஞன் தற்கொலை
Sri Lanka Police
Vavuniya
Crime
Death
By Fathima
வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு குழந்தையின் தாயான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா - பறையனாலங்குளம் பிரதேசத்தில் இன்று காலை (13.05.2023) பெண்ணின் வீட்டுக்குள் வைத்தே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டின் காரணமாக படுகாயமடைந்த 26 வயதான யுவதி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
விசாரணை
மேலும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞர், அருகில் உள்ள கோயில் முன்பாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.